Monday, February 17, 2014

நெய்வேலி காட்டாமணக்கு இருக்க, டி.ஏ.பி. எதற்கு?

நெய்வேலி காட்டாமணக்கு இருக்க, டி.ஏ.பி. எதற்கு?‘‘

‘உலுக்கி எடுக்கும் உரத் தட்டுப்பாடு... சமாளிப்பது எப்படி... வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்' என்ற தலைப்பில் ஜூன் 17-ம் தேதியன்று திருவாரூரில் பசுமை விகடன் நடத்திய பயனுள்ள பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது

‘‘அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு நீங்கள்லாம் தவிக்கிறீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி. தேவையே இல்லங்கறதுதான் உண்மை. உங்க ஆறு, குளம், வாய்க்கா, வரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சி கிடக்கற நெய்வேலி காட்டாமணக்கு மட்டுமே போதும். நான் இதை மட்டுந்தான் அடியுரமா பயன்படுத் துறேன். விளைச்சலும் அமோகமா இருக்கு.
நாத்தாங்காலுக்கு ரெண்டு சால் உழவு ஒட்டி, நெய்வேலி காட்டாமணக்கை பரப்பி விட்டுட்டுட்டு, பிறகு, ரெண்டு சால் உழவு ஓட்டி, ஒரு வாரம் கழிச்சி விதைத் தெளிக் கணும். 15 நாள்லயே ஒரு சாண் உயரத்துக்கு நாத்து வளர்ந்துடும். சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டி, நெய்வேலி காட்டாமணக்க பரப்பி, மறுபடியும் ரெண்டு சால் உழவு ஓட்டி, பிறகு 10 நாள் கழிச்சி நாத்து நட்டா... இலை பசுமையா இருக்கும். பூச்சி, நோய், களையே இருக்காது. தழைச்சத்தும் நிறைய கிடைக்கும். ஏக்கருக்கு சுமாரா 2,000 கிலோ நெல் மகசூலா கிடைக்குது.
இப்படிப்பட்ட நெய்வேலி காட்டாமணக்கை 'விஷச்செடி'னு சொல்றது அறியாமை. இது ஒரு அருமையான உரச்செடி.. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்’’ என சொன்னதும் விவசாயிகளின் முகங்களில் ஏக மலர்ச்சி.

No comments: