Monday, February 17, 2014

reduce the cost of cow feed.

reduce the cost of cow feed....better way is producing the feed by youself... for that u need to buy kaambu 100kgs, solam 100kgs, wheat 100ks... then grain it for just 1 time it will b cost around 2rs perkg to grain those.... so it ll cost overall around some 4500. then buy kaaruka tavudu and buy pottu 100ksg... by preparing the feed like this u ll get more profit in dairy farms.... and u need to put 4 to 5 kgs of green fooder(CO4) and some hay... so hf or jersy cow easily provide more than 10 liters per day.so dont depend feed on cow feed company it ll reduce the profit of dairy and it reduce the interest of urs in future enhancement of dairy farms.... so plan accordingly and analysis properly to start dairy farm. and u need to have agriculture land by urs...

நெய்வேலி காட்டாமணக்கு இருக்க, டி.ஏ.பி. எதற்கு?

நெய்வேலி காட்டாமணக்கு இருக்க, டி.ஏ.பி. எதற்கு?‘‘

‘உலுக்கி எடுக்கும் உரத் தட்டுப்பாடு... சமாளிப்பது எப்படி... வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்' என்ற தலைப்பில் ஜூன் 17-ம் தேதியன்று திருவாரூரில் பசுமை விகடன் நடத்திய பயனுள்ள பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது

‘‘அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு நீங்கள்லாம் தவிக்கிறீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி. தேவையே இல்லங்கறதுதான் உண்மை. உங்க ஆறு, குளம், வாய்க்கா, வரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சி கிடக்கற நெய்வேலி காட்டாமணக்கு மட்டுமே போதும். நான் இதை மட்டுந்தான் அடியுரமா பயன்படுத் துறேன். விளைச்சலும் அமோகமா இருக்கு.
நாத்தாங்காலுக்கு ரெண்டு சால் உழவு ஒட்டி, நெய்வேலி காட்டாமணக்கை பரப்பி விட்டுட்டுட்டு, பிறகு, ரெண்டு சால் உழவு ஓட்டி, ஒரு வாரம் கழிச்சி விதைத் தெளிக் கணும். 15 நாள்லயே ஒரு சாண் உயரத்துக்கு நாத்து வளர்ந்துடும். சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டி, நெய்வேலி காட்டாமணக்க பரப்பி, மறுபடியும் ரெண்டு சால் உழவு ஓட்டி, பிறகு 10 நாள் கழிச்சி நாத்து நட்டா... இலை பசுமையா இருக்கும். பூச்சி, நோய், களையே இருக்காது. தழைச்சத்தும் நிறைய கிடைக்கும். ஏக்கருக்கு சுமாரா 2,000 கிலோ நெல் மகசூலா கிடைக்குது.
இப்படிப்பட்ட நெய்வேலி காட்டாமணக்கை 'விஷச்செடி'னு சொல்றது அறியாமை. இது ஒரு அருமையான உரச்செடி.. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்’’ என சொன்னதும் விவசாயிகளின் முகங்களில் ஏக மலர்ச்சி.

Friday, February 07, 2014

மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவ

மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில்
ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக்
கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

சிறந்த மதிய உணவகம்..!
1- சந்திரன் மெஸ், தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன்வறுவல் நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ், தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ், தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன்
கோலா )
4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )

மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல்
- மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை -
புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் -
மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி மட்டன் பிரியாணி

சிறந்த மாலை நேர உணவகம்..!
1- கோனார் மெஸ், சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு, மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம்
பாயா )
2- குமார் மெஸ், தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர்
மஹால் கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )

சிறந்த மாலை உணவகங்கள்..!
ஜானகிராமன் மெஸ்-
திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன்
( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால்
ரோடு ( கிங்
பரோட்டா,பட்டர்
சிக்கன் )
பஞ்சாபி தாபா -
தல்லாகுளம் ( பட்டர்
நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை -
ஆவின் சிக்னல்
( மதுரையின் சிறந்த
பரோட்டா )
போஸ் கடை-
அண்ணா பஸ்
ஸ்டாண்ட் ( பகலில்
கறிக்கடை,இரவில்
இட்லி கடை )
சிறந்த சைவ
உணவகங்கள் மதிய
உணவு..!
கணேஷ் மெஸ்,
மேலபெருமாள்
மேஸ்திரி ரோடு ( புல்
மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட்
( தோசை,வடக்கிந்திய
உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால்
ரோடு ( நெய் பொங்கல்,
முஷ்ரூம் பிரியாணி,பன்
அல்வா )
இவை அனைத்தையும்
விட மதுரையின் சைவ
மாலை நேர
உணவகங்களின்
முன்னோடி -
முருகன் இட்லி கடை,
இம்மையில்
நன்மை தருவார்
கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த
இட்லி )
மதுரையின் தனிப்பட்ட
சிறப்பு சுவைகள் -
திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ்
லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால்
ரோடு,தங்க ரீகல்
எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட
சிறந்தது )
சங்கர் காபி,
அண்ணா பஸ்
ஸ்டாண்ட்- உழுந்த
வடை
ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய
வெள்ளாளர்
தெரு,பெரியார் பஸ்
ஸ்டான்ட் அருகில் ,
ஆர்த்தி ஹோட்டல்
ரோட்டில்
சென்று இடப்புறம்
செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம்
தோசை,காலி ப்ளவர்
தோசை....
விசாலம் காபி-
கோரிப்பாளையம் ,
தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா"
காபி என்றழைக்கும்
அளவு மீண்டும்
மீண்டும் பருக
தூண்டுவது
பெயர் தெரியாத அந்த
இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ்
மேம்பாலம் கீழே -
இளநீர் சர்பத்.
இவை அனைத்தையும்
விட
மதுரையின் பிரத்தியேக
குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்-
ஜில்ஜில் ஜிகர்தண்டா.
மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க
மதுரை உணவின்
சுவை
உலகெங்கும் புகழ்
பரப்புவோம்...

Saturday, February 01, 2014

ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !!!

ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !

ரோ பட்ஜெட்’ விவசாயத்தின் முக்கிய இடுபொருட்கள்... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ஆகிய இரண்டும்தான். விவசாயிகளே எளிதில் தயாரித்துக் கொள்ளக்கூடிய இந்த இடுபொருட்களை, ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் பயன்படுத்தி, கண்கூடாக பலன்களை உணர்ந்திருக்கிறார்கள். அத்தகையோரில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து-ஈஸ்வரி தம்பதிக்கும் இடமுண்டு. இவர்கள், மரப்பயிர்களுக்கு இந்த இடுபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பத்து ஏக்கரில் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் இவர்களின் பண்ணையில், காலைவேளையில் கால் வைத்தோம். வாய் நிறைந்த சிரிப்புடன் வரவேற்று உபசரித்தனர் தம்பதியர். வேப்பமர நிழலில் கட்டியிருந்த நாட்டுமாடுகளுக்கு வைக்கோல் போட்டபடியே பேச ஆரம்பித்தார், புரவிமுத்து.

''எம்பேரு முத்துசாமிங்க. சொந்த ஊரு கொடுமுடி பக்கம் இருக்கிற புரவிப்பாளையம். 15 வருஷமா இங்க குடியிருக்கேன். 'புரவிப்பாளையம் முத்துசாமி’னு அக்கம்பக்கம் உள்ளவங்க கூப்பிட ஆரம்பிக்க... அது சுருங்கி 'புரவிமுத்து'னு ஆயிடுச்சு'' என்று பெயர் விளக்கம் கொடுத்தவர்,

''காலேஜ்ல படிக்கறப்பவே இயற்கை மீது ஆர்வம் அதிகம். லீவு விட்டா காடு, மலைனு சுத்திட்டே இருப்பேன். படிச்சு முடிச்சு விவசாயத்துக்கு வந்தேன். 'கொடுமுடி டாக்டர்’ நடராஜன் மூலமா பஞ்சகவ்யா பத்தித் தெரிஞ்சிட்டேன். தொடர்ந்து, நம்மாழ்வார் அய்யா கூட்டங்கள்லயும் கலந்துகிட்டது மூலமா இயற்கை வேளாண்மை பத்தியும் மரம் வளர்க்குறது பத்தியும் தெரிஞ்சிட்டேன்.

சிலிர்க்க வைத்த ஜீரோ பட்ஜெட் !

அதுக்கப்பறம் 10 ஏக்கர் நிலத்தையும் முழுக்க முழுக்க இயற்கைப் பண்ணையா மாத்திட்டோம். அந்த சமயத்துல 'பசுமை விகடன்’ மூலமா திண்டுக்கல்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல நானும் மனைவியும் கலந்துக்கிட்டோம். சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்... எங்களை ரொம்ப ஈர்த்துச்சு. தொடர்ந்து ஈரோடு, கோவையில நடந்த அவரோட வகுப்புலயும் கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துக்கிட்டோம். அதுக்கப்பறம் எங்க பண்ணைய முழுசா ஜீரோ பட்ஜெட்டுக்கு மாத்திட்டோம்.

முதல்படியா கலப்பின மாடுகள் அத்தனையையும் வித்துட்டு, நாட்டுமாடுகளை வாங்கினோம். இப்ப 6 நாட்டு மாடுகளும், 2 கன்னுக்குட்டிகளும் இருக்கு. அதுகளோட கழிவுகளை வெச்சுதான் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு தயார் பண்ணி பயிர்களுக்குக் கொடுக்கிறோம்'' என்ற புரவிமுத்துவைத் தொடர்ந்தார், ஈஸ்வரி.

மழை ஈர்ப்பு மையம் !

''இந்த 10 ஏக்கருக்கும் கிணத்துப் பாசனம்தான். 5 ஏக்கர்ல பென்சில், பெருமரம், வாகை, பூவரசு, மலைவேம்பு, காயா, மகோகனி, இலவு, வேம்பு...னு 2 ஆயிரம் மரங்கள் இருக்கு. அதையெல்லாம் நட்டு நாலு வருஷம் ஆச்சு. 5 ஏக்கர்ல சப்போட்டா, மா இருக்கு. இந்த மரங்கள் ஆறு வருஷமா பலன் கொடுத்திட்டிருக்கு. இந்தப் பண்ணைக்கு நாங்க 'கனிச்சோலை’னு பேர் வெச்சுருக்கோம். மரங்கள் நிறைய இருக்கறதால மழை ஈர்ப்பு மையமாவும் இது இருக்கு. மழை பெய்யுற சமயத்துல மத்த இடத்துல பெய்யுறதைவிட இங்க கொஞ்சம் அதிகமாவே பெய்றதை நாங்க கண் கூடா பாத்துருக்கோம்.

மரங்கள் நடவு செஞ்சு 2 வருஷம் வரைக்கும் வாரம் ரெண்டு தண்ணி கொடுப்போம். ஒவ்வொரு முறையும் ஜீவாமிர்தத்தை பாசனத்துல கலந்துடுவோம். அப்படிக் கொடுக்க ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலயே மண் பொலபொலப்பாகி, ஈரப்பதம் அதிகமாச்சு. பாலேக்கர் சொன்னது மாதிரியே மண்ணுக்கு அடியில இருந்த மண்புழுக்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிச்சது. வறட்சியிலகூட மரங்கள் வாடிப் போறதில்லை. 3-ம் வருஷத்துல இருந்து 15 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் கொடுத்துட்டிருக்கோம்.

ஊட்டம் கொடுக்கும் கனஜீவாமிர்தம் !

ஜீவாமிர்தத்தைவிட அதிக வீரியமா செயல்படுறது, கனஜீவாமிர்தம். பொதுவா, மானாவாரி விவசாயத்துலதான் இதைப் பயன்படுத்துவாங்க. ஆனா, நாங்க எங்க தோட்டத்துல இருக்கற மரங்களுக்கும், பழப்பயிர்களுக்கும் மாதம் ஒரு முறை அரை கிலோ கனஜீவாமிர்தம் கொடுக்குறோம். வறட்சியால பாதிப்பு, வேர் சம்பந்தமான நோய்கள்னு எதுவும் பாதிக்காம தடுத்து, மரங்களுக்கு ஊட்டம் கொடுக்குறது கனஜீவாமிர்தம்தான்'' என்றார் ஈஸ்வரி.

பூச்சிகள் தொல்லை இல்லை!

மீண்டும் பேச்சை ஆரம்பித்த புரவிமுத்து, ''பழப்பயிர்களுக்கும் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ரெண்டையும் 15 நாள் இடைவெளியில மரத்துக்கு 5 லிட்டர் வீதம் கொடுக்குறோம். பூக்கும் பருவத்துல 10 லிட்டர் தண்ணியில 2 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து மரங்க மேல தெளிப்போம். இதனால பிஞ்சுக உதிராம, சேதாரம் இல்லாம காய்ச்சு பழுத்து பலன் தருது. பழங்களை சேதப்படுத்திற வெள்ளை ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிக அறவே வர்றது இல்ல'' என்ற புரவிமுத்து, நிறைவாக,

ஜீரோ பட்ஜெட் விவசாயம்ங்கிறதால எங்கள் தோட்டத்தில் இருக்கிற வேலையை நாங்களே செஞ்சிடுவோம். இடுபொருள் செலவும் இல்லை. ஆக எல்லாமே வரவுதான். ''பழமரங்கள் மூலம் சீசனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. 5 ஏக்கர் நிலத்துல இருக்கிற மரங்களை 6 வருஷத்துக்குப் பிறகு வெட்டுறப்போ... குறைந்தபட்சம்

2 ஆயிரம் டன் தேறும். விறகுக்கு வித்தாக்கூட டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய்னு இப்ப இருக்கற நிலவரப்படி 60 லட்சம் ரூபாய் வருமானம் நிச்சயம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்று உற்சாகமாகச் சொன்னார்.

நாட்டு மாடுகள் பற்றிப் பேசிய ஈஸ்வரி, ''நாட்டு மாடுகள்ல பால் குறைவாத்தான் கிடைக்கும். கன்னுக்குட்டிக குடிச்சதுபோக, வீட்டுத்தேவைக்கே அந்தப்பால் சரியா போயிடும். அதனால... இயற்கை இடுபொருள் தயாரிக்க மட்டுமே நாட்டு மாடுங்கறது நெருடலா இருந்துச்சு. ஆனா, அதுக்கும் பசுமை விகடன் மூலமாவே மாற்று வழி கிடைச்சுடுச்சு. இப்ப நாட்டு மாடு வருமானம் கொடுக்குற மாடாயிடுச்சு'' என்று குஷியோடு சொன்னவர், அந்த நுட்பங்களையும் சொன்னார். அது-

''சேலத்துல இருக்கிற சுரபி கோசாலையில நாட்டு மாடுகளோட கோமியம், சாணத்தைப் பயன்படுத்தி, அர்க், சாம்பிராணி, விபூதி, ஷாம்பூ, சோப்புக்கட்டி, கொசுவத்திகளைத் தயாரிச்சு விக்கிறாங்கனு பசுமை விகடன்ல ஒரு செய்தி வந்துருந்துச்சு. அந்த கோசாலைக்குப் போய், தயாரிப்பு முறைகளைக் கத்துக்கிட்டு வந்தோம். 2 வருஷமா நாங்களும் தயாரிச்சு வித்துக்கிட்டிருக்கோம். இதன் மூலமா மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. அதனால, நாட்டுமாடுகள்ல பால் வருமானம் இல்லையேங்கிற வருத்தம் சுத்தமா போயிடுச்சு. செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் வளர்த்து வித்துக்கிட்டுருக்கோம். அதுலயும் தனியா வருமானம் கிடைக்குது.''

-- நன்றி விகடன்